07 November 2011

துளி 10

                                                                  அழகின் ஈசன்!




அலைபாயும் கண்கள்! அதுபோல் மனமும் 
நிலைகொளாதான்! கேளான்! நிர்பந்தன்! நேசன்! 
விலைகேட்டும் வாங்கான்! பாங்கன்! சொற்பதன்!
கலைகுணத்தான்! கடுஞ்சினன்! வாகன்! வித்தகன்!

எதற்கும் அஞ்சான்! எதினும் விஞ்சுவான்!
பதர்கும் வார்ப்பான்! பகுப்பன்! பரிவுளன்!
குதர்கன்! பக்தன்! குன்றேறி நிற்பான்!
வதனம் குதூகலன்! வார்த்தை விசாலன்!

மண்வாசனை பேச்சில் மயக்கும் தெற்கன்! 
தன்போக்கில் போகும் தனியன்! தனையன்!
தன்நிகரான்! வீரன்! தனியினன்! தலைவன்!
தன்மூக்கில் பீறிய தங்கம் கொண்டவன்!

படைக்கு முந்துவான்! சடுதியில் பிந்துவான்!
உடையலங்கார அக்கறையுள்ளவன்! எல்லோருக்கும் உதவுபவன்!
எப்போதும் "நீங்கள் எல்லாம் வாலிப பிள்ளைக!" வசனம் கொண்டவன்!
தப்பேதும் அறியாதவன்! நட்புகுளத்தின் நற்துளியிவன்!

நட்பு வட்டத்தை நாள்தோறும் பெருக்குவான்! 
நண்பர்கள் வாட்டத்தை எப்படியேனும் சுருக்குவான்! 
உட்புகுந்த ஆண்டின் உயர் "TASA "தலைவன்!
(  " Tamilnadu Agricultural Students' Association " )
ஊற்றெடுக்கும் உரிமை போராட்ட இளைஞன்!

ஈரவிழி காவியத்தை இமையிடுக்கில் வடிப்பான்!
இதற்காக நண்பர்கள் யாவரையும் இழுப்பான்!
சாரதியாய் தமிழ்சுடர் தாங்கியேந்தி நடப்பான்!
சந்தர்ப்பம் வாய்த்தால் சந்திரனுக்கே நடப்பான்!

சந்திக்க வாய்ப்பில்லை, இனி  என்றுமே இல்லை!
சிந்தனை  ஏய்ப்பில்லை, நீ இல்லவே இல்லை!
( துளி கண்களில் ஊற்றெடுத்து வடிகிறது )

                                                                 
                                                                                       துளி தொடரும் ..........

2 எழுதுக!:

anna said...

அன்புக்கு முருகேசன் என்றும் அடிமைதான்! அவரிடம் இருந்த முன்கோபமே அவருக்கு எதிரியை உருவாக்கி அதன்மூலம் நம்மிடம் இருந்து நிரந்தரமாக அவரை பிரிய நேர்ந்த கோரத்தை யார்தான் மறக்கமுடியும் ? அவர் இருந்திருந்தால் நமது get together function எப்படி கோலாகலமாய் இருந்திருக்கும் என்பதை நினைக்கையில் மனதுக்குள் விம்மி அழுவதை தவிர எம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

I AM FOR YOU said...

நல்ல நட்பின் சுவடு தெரிகிறது.
பிரிவின் வலி புரிகிறது.
இன்று இவன் நாளை அவன்
என்று நான் என்பதே உலகம்.

அந்த நாள் வருமுன்னே
உன்னைப்போல் அவனைப்போல்
கண்ணீர் தரும் உறவுகள்
இருந்துவிட்டால்
வாழ்ந்த நாள் போதும்
பிறிதொரு சொர்க்கம்
நண்பன் இருக்குமிடம்.