27 August 2010

துளி 2

முதல் நாள்.
அங்கே.........

காலம் உன்னை கடந்தாலும் காற்று பையை பிரிந்தாலும் 
காலனிடமிருந்து மட்டும் கடன் கிடைக்காது என்பதுணர்க!  

செயற்கை தடாகம் தாண்டியவுடன் இங்குதான் செயல்வீரர்கள்
செயற்கரிய வரவேற்றனர்! பச்சை ஆடைஉடுத்தி பாங்காய்!
கல்லூரியின் படியேறி மகிழ்வும் கவலையும் மிரட்சியுடனும்
வில்லோடிவிட்ட வேலாய் விரைந்தோம் எழுச்சியுடன் !

செயற்கை நீரூற்று கீழிருந்து துளிகள் வீச இயற்கை நீரூற்று கண்களில்..
இந்த கல்லூரியில் மட்டும் எப்படி இத்தனை வண்ணங்களாய்  பசுமை!
இந்தப் பசுமை நினைவுகளல்ல! நினைவுகளாகப் போகும்  நிஜங்கள்!  
பெற்றோரை கிடைக்கப் பெற்றோர் பெருவாரியாய் கண்களில் துளிகளுடன்.

கண்ணின் மசி கரைந்து கன்னம் நனைத்த தோழியர் கூட்டம்.
எண்ணம் முழுதும் பெற்றோரை பிரிய போகும் துயர்.
நண்பர்களே! நீங்கள் யாரெல்லாம் அங்கே நின்றீர்கள் தெரியவில்லை!
கண்கள் எனக்கும்  திரையிட்டிருந்தது துளிகளால் புரியவில்லை!

ஆடி இட்ட ஓரிடம்! அது  கூடக் கூடும்  பேரிடம்!
நாடி வந்த சீரிடம்! நன்றிது போல்  உண்டோ பாரிடம்!
தேடி  வந்து கூடிடும்! தேன்பாகில் ஊறிடும்!
சூடி வந்த பூவிடம் சுந்தர தமிழ் பாடிடும்!

பாடல் அரங்கேறும் இடம்!
ஆடல்  அரங்கேறும் திடல்! 
திறமை மெருகேறும் இடம்!
சிறுமை வெளியேறும் திடல்!
திரைப்படம் இங்கு தூது போகும்!
நிறைகுடம் நித்தம்  ததும்பி ஓடும்!

ஆனந்தமா ! துக்கமா ! உணர்ச்சிப் பெருவாகத்தில் உள்ளம்!
ஏனிந்தத் துளிகள்! இமையணை தாண்டியும் வெள்ளம்!
நானிந்த உலகிற்குள் நுழைவேனென்று நினைக்கவில்லை!
வானிந்த பறவைகளின் சிறகுகளை நனைக்கவில்லை!

மண்வெட்டி பிடிக்க மலர்க்கைகள் அதிகமாய் வந்திருந்தன !
இந்த கல்லூரியில் தான் வண்டுகளை விடவும் மலர்கள் அதிகம் !
காகங்களை விடவும் கிளிகள் அதிகம்! நீரை விடவும் வயல்கள் அதிகம்!
மீசை முளைத்தவர்களை விடவும் ஆசைபட வைப்பவர்கள் அதிகம்

குயில்களை விடவும் இனிமை அதிகம்! அழுகை விடவும் ஆறுதல் அதிகம்!
மந்திகள் அதிகம்! மானினம் அதிகம்! மயங்கச் செய்யும் மதுவினம் அதிகம்!
சிந்தும் துளியை முந்தியால் துடைத்து அம்மா சொன்னார்கள் "அழாதே!"
கன்னம் நனைத்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை! 

                                                                                      துளிகள் வடியும்.......... 





6 எழுதுக!:

கல்லூரான் said...

ஏண்டா இவ்வளவு புலமையை வைத்துகொண்டு காலத்தை வீணாக்கிவிட்டாயே

I AM FOR YOU said...

நண்பா கலக்கிட்டியப்பா. கலக்கிட்ட.படிக்க நான் ரெடி.எழுதி தள்ளு.

chithramathan said...

vaNNa thogai viriththa mayiludan thuLi pirakaasamaai jolikkiRathu. kavithai muluvathum un kuralil olikkumbadi pathivu seithaal "amuthaththai athan asal rusiyil parukiyathu pola irukkum" yendru aasaipadukiRom

Subhadra said...

unmaiyaa chollanumnaa....

Chithu-kkullum oru pulavan etti paarkkiraan :)

chithramathan said...

வண்ண தோகை விரித்த மயிலுடன் துளி பிரகாசமாய் ஜொலிக்கிறது . கவிதை முழுவதும் உன் குரலில் ஒலிக்கும்படி பதிவு செய்தால் "அமுதத்தை அதன் அசல் ருசியில் பருகியது போல இருக்கும் " என்று ஆசைபடுகிறோம்

rmkgreat said...

சுபத்ரா சொல்வது முற்றிலும் உண்மை