05 October 2010

துளி 6

உணவறை !

இளவெயில் 
இதமாய் தொட 
வளவயல் 
வனிதையர் நட 
வரப்போரம் வரிசையாய் 
எறும்புகளாய் ஏறினோம்!


மத்திய பண்ணை 
இருபக்கமும் 
பரந்து விரிந்த 
பாதாம் மரங்கள் !
குடை பிடித்தாற்போல் 
எங்களை 
குசலம் விசாரிக்கும் !

கோழிப்பண்ணை 
கடந்தால் வெண் பன்றி கூடம் !
பால் பண்ணை 
பக்கத்தில் கால்நடை மாடம் !

எதிரில் தான் 
பருவம் வளர்ந்த  
பழத்தோட்டம் !

மீறி நடந்தால் 
பருவம் மீறிய 
பூந்தோட்டம் !
உட்புகும் 
உள நோட்டம்! 
மரியகுழந்தை இல்லம் !

வரிசையாய் வாகை 
மரங்கள் !

வந்தனம் கூறும் 
வந்தினம் !
வண்டினம் தேடும்  
பூவினம் ! 
இலைமறை 
காயினம் !

ஜன்னலின் பின்னால் 
பூக்களின்   புகலிடம் !
பூவையர் உறைவிடம் !

தும்பை பூவின் 
தூர் பாகம் 
துளிகளால் நிறைந்தது !
சுவைத்தால் இனிக்கும் !

வழியோரம் 
தும்பை செடிகள்  
விழியோரம் 
பசுமை வார்க்கும் !

யாரும் யூகித்தறியாத 
நேரத்தில் இங்கு 
மதிய உணவு வேளை!

நண்பகல் 
பதினோரு மணிக்கு 
இழுக்கும் 
பகல் உணவு ஆளை !

புதிராக இருந்தது !
புதிதாக இருந்தது !

வள்ளுவர் இல்லம் 
வந்தோம் !


" சார் மெஸ் எங்கே ?" 

"பர்ஸ்ட் இயரா"
" ஆமா சார் "

" வா சாப்பிட போவோம் "

                                                                                   துளிகள் விழும்........ 

10 எழுதுக!:

Anonymous said...

அருமை சீனியர், தொடர வாழ்த்துக்கல்

Unknown said...

கணினி கவிகனரே உங்கள் நல்ல கவிதை தமிழை கண்டேன் .ஆனந்தம் கொண்டேன் தமிழ் அழிந்து விட்டது என்று என்னியோர்க்கு இல்லை இல்ல்லவே இல்லை .வாழ்கிறது கணினியிலும் என்று பறை சாட்டுவது போல தங்கள் கவிதை நடை நன்றாக உள்ளது. .வளர்க உங்கள்
புகழ் தரணி எங்கும். அதை கண்டு என் உள்ளம் பொங்கும்.

Anandh said...

Daily I will check the site and got it today part 6. Very nice. Super.... The last 2 lines shows the next part will be about tagging. I guess.

rmkgreat said...

நன்றி ஜூனியர்!
தங்கள் பெயர்
பொறித்தால்
இன்னும் மகிழ்வேன்!

rmkgreat said...

நண்பர் b க்கு என் நன்றி!

உங்கள் வாழ்த்துக்கள்
என் கவிதை பயிருக்கு
உயிர் உரங்கள்!

Subhadra said...

Getting very interesting with every 'thuli', We are on board with your journey thro college enjoying every phase.

chithramathan said...

அப்பா வின் ஆனந்த வாழ்த்துக்கள் .
என் நெஞ்சமெல்லாம் இன்பம் நிறைந்து பொங்கி வழிகிறது! உன் கவிதைகளை படித்தவுடன் . உன் புகழ் உலகமெல்லாம் திகழட்டும் . கவிதை வரிகள் உன்
கல்லூரி வளாகத்தை சுற்றி பார்த்த உணர்வு உண்டாகிறது . பரவட்டும் உன் புகழ் பாரெங்கும் வளரட்டும் உன் கவிதை வரிகள் .
- அப்பா க.ராமசாமி

அம்மாவின் ஆசியும் வாழ்த்துக்களும்
ஈன்ற பொழுது பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் வாழ்த்த வார்த்தைகள் இப்பொழுதுள்ள அகராதியில் இல்லை!
வாழ்க பல்லாண்டு!
-அம்மா ரா.ராஜகனி

qwerty said...

மேகம் கருக்குது டும் சுக்கு டம் சுக்கு ..
தோகை விரியுது டும் சுக்கு டம் சுக்கு

Anonymous said...

MK,
Read your thuli 6.
I am proud to loudly say to the world that
- I am your room mate (first)
- I am one of the character in
your thuli (second)
- And finally I am your one of the
close friend.
Vadugapatti Vairamuthu Engalukku
etta kani!
Anal Intha
Thuthukudi Vairamuthu endrum
engal Idayakani!

Nandri Iraiva, Enakku ippadi
oru araithozanai
thanthamaikku.

rmkgreat said...

நன்றி ! அரசு !
என் நண்பர்கள் எல்லோருக்கும்
நன்றி !
என்னை இலக்கிய உலகை
வலம் வர வைத்த உங்கள்
அனைவருக்கும் நன்றி !