02 September 2010

துளி 3

 அறை எண். 24 வள்ளுவர் இல்லம் 

மரியக்குழந்தை இல்லம் 

இன்றை மட்டும் உணர்! நாளை என்பது நமக்கில்லை காண்!

ஆடிடோரியத்தில் எங்களுக்கெல்லாம்
வகுப்பறையின் கால அட்டவணையை தந்து
விடுதியின் விலாசம் தந்தனர்.

விடுதி என்று தான் எல்லா கல்லூரியிலும் இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் தான் இல்லம் என்று இருந்தது. 

வள்ளுவர் இல்லம் -
மரியகுழந்தை இல்லம்
  - ஒன்று புல் வெளியில் புதையல் தேடுபவர்களுக்கு. 
  - மற்றொன்று பூக்களுக்கு.

வள்ளுவர் இல்லம் போகும்  வழியிடையில்  சிற்றுண்டி சாலை
கள்ளம் இல்லாத கவின் மலர் சோலைசூழ் நீச்சல் குளம் - உள்ளம்
கொள்ளை கொள்ளும் கொடிசுற்றிய வேலி பார்க்க பார்க்க
எல்லை இல்லாத ஆனந்தம் இறங்கிக் குளிக்க எண்ணம்.
உள்ளே பார்த்தால் ஒரு துளி நீரும் இல்லை.

காற்று என்ன காதல் பேசியதோ தெரியவில்லை மரங்கள் சில மறுதலித்தன!
ஊற்றெடுத்த உற்சாகத்தில் வந்து நின்றேன் வள்ளுவர் இல்லம் முன்

இல்லம் என்றால் இங்கு வந்தபின் தான் தெரிந்தது.
புனித இடங்களுக்கு கோயில் என்று பெயர் வைத்தால்
இதுவும் கோயில் தான்.

விடுதி என்று நினைத்தால் 
விடுதலை வேண்டி நிற்பவர்களுக்கு
இது விலங்கிட்ட  சிறை.
வானம்பாடிகளுக்கு இது வானம்.

இது அடைகாக்கும் பெட்டகம் முட்டைகளுக்கு.
வைரங்களுக்கு இது ஒரு மகுடம் .
அறியாமை சிதைகளுக்கு இது அணையா தீ 

குயில்களுக்கு இது கூடு கிளிகளுக்கு இது கூண்டு.
எலிகளுக்கு இது எப்போதும் வளை தான்.
புலிகளுக்கு இது வனாந்தர காடு .

இந்தியாவுக்கு அரண் வடக்கே - இமய மலை
இந்தக்கல்லூரிக்கு அரண் மேற்கே  - யானை மலை 
இனிவரும் அங்கங்களில் எல்லாம்  இந்த மலையும்
பனிவிழும் புல்வெளியும் பூக்களும் தான் உலவும் !

அறை எண் 24 :  

தொட்டதும் கூடம் திறந்தது வாயில் - சொர்க்கம்,
மற்றெதும் தராத மயிலிறகை இடுக்கி வைக்கும் புத்தகம்!  
சட்டென்று விழுந்தது  என் சட்டையின்  மேலே  ஒரு துளி !
விட்டத்தில் இருந்த சிட்டுக்குருவியின்  சில்மிஷம் சிறு துளி!

மூன்று கட்டில்கள் மூன்றில் ஒன்று முக்காலுடையது!
மூன்று அலமாரிகள் மூவர் இவ்வறையில் அடைக்கலம்!
செல்வம் இங்கு அரசேற்கும் முத்து இங்கு மகுடமேறும்!
கல்வி என்பது கற்றுணரத்தான் பல்வித்தை பயில வந்தோம்!

                                                                                  துளி எழும்  ......


5 எழுதுக!:

Jey said...

வளர வாழ்த்துக்கள்

rmkgreat said...

நன்றி ஜெய்

qwerty said...

enna thalaiva raja nadai poduhu thogai cotinue continue

chithramathan said...

உண்மையில் உங்கள் கல்லூரி ஒரு சுற்றுலா தளமாக அறிவிக்க படவேண்டிய அற்புதமான இடம்......
வருடங்கள் பல ஆனாலும் அதை பார்த்தபோது என் வயது குறைவாய் இருந்தாலும்.....
அந்த பசும் சோலையின் இனிமை இன்னும் கண்ணுக்குள் நிறைந்து
காட்சி தந்தாலும்.....
உன் வார்த்தையின் இனிமை தான் அந்த காட்சிகளை
மெருகேற்றி தெளிவாய் நினைவூட்டுகின்றன!

rmkgreat said...

சுபத்ரா சொல்வது முற்றிலும் உண்மை