25 December 2010

துளி 8

 சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ( நட்பு ) 
ஏழாம் அறிவன் !

நட்பென்றால் 
இதயக்கதவுக்குள்
சிறை வைப்பாய் !

தப்பென்றால் 
இமயமானாலும்
சிதற வைப்பாய் !

உன்னை
உரசிப்பார்த்தால் 
எரிய வைப்பாய் !

உணவுக்குள் 
இருப்பாய் 
சிறிய உப்பாய் ! 

கண்டிப் பானவன் ! நட்பின்
               கலைஞன் ! தவறி ழைத்தால்
தண்டிப் பானிவன் ! எவர்க்கும்
               தனயன் ! யாவர் நலனும்
ஒன்றிப் போனவன் ! கருத்தில்
                ஓங்கார மானவன் ! சினத்தில்
குன்றிப் போகா திவனின்
                 குறிக்கோள் ஒன்றாம் நட்பு!

யாரையும் இயக்குவான் ! நட்பாலே
                 எவரையும் மயக்குவான் ! நண்பர்கள்
கூரையாய் திகழ்ந்திடுவான் வான்போலே
                 குழந்தையாய் மகிழ்ந்திடுவான் ! காற்றினிலே
சீரிலாமல் எழுதிடுவான் ! எப்போதும்
                  சிந்திப்பது போன்றிருப்பான் ! சுருள்முடியை
சீரிலாமல் வாரிடுவான் ! சிரித்திருப்பான் !
                  சிநேகிதத்தின் ஏழாவ தறிவிவனே !


சுயம் அழித்து ஞயம் வளர்ப்பான் !
ஞயம் வளர்ந்தால் சுயம் என்பான் !
லயம் அறிவான் இலாவகம் அறிவான் !
பயம் வெல்வான் பாடம் சொல்வான்  !


நான்கு கால் முயல்களை மட்டுமே பிடிப்பான் !
(என் செய முடியும் ஒன் செய முடியாது )
ஆண் குயில் மட்டுமே பாடுமென்பான் !

துளிகளை நட்பால் பிரபஞ்சம் ஆக்குவான் !
வளியினும் வார்த்தையில் வேகம் காட்டுவான் !

பிடிவாதத்தில் யாரையும்  மிஞ்சுவான் !
அடிக்குரல் பாடல்களை என்றும் இரசிப்பான் !
( அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ )

அச்சோகன் வெல்வான் !
அச்சோகம் கொல்வான் !  
(அ சோகன் = சோகம் இல்லாதான் )

என்று சந்தித்தேன் இன்று நினைவு அறிவிலில்லை !
என்றும் சந்திக்கிறேன் ! இன்று தூரம் அதிகமில்லை ! எம் நண்ப !
துளி கொட்டும் ........
                                                                                
                  

6 எழுதுக!:

கல்லூரான் said...

வலிக்குது....அழுதிருவேன்.

Raj said...

Its nice.

Ithai purinthu kolvatharku ethavathu konar notes unda???!!!!

anbudan
raju

Revathi said...

:) Nicely written Jus cant keep myself smiling after reading this

"யாரையும் இயக்குவான் ! நட்பாலே
எவரையும் மயக்குவான் ! நண்பர்கள்
கூரையாய் திகழ்ந்திடுவான் வான்போலே
குழந்தையாய் மகிழ்ந்திடுவான் ! காற்றினிலே
சீரிலாமல் எழுதிடுவான் ! எப்போதும்
சிந்திப்பது போன்றிருப்பான் ! சுருள்முடியை
சீரிலாமல் வாரிடுவான் ! சிரித்திருப்பான் !
சிநேகிதத்தின் ஏழாவ தறிவிவனே !" :) How true!!!

Thanks for that :)

rmkgreat said...

கோனார் உரை :
உங்களின் ஒவ்வொரு
உண்மையான உயிரினும் நிகரான
உள்ளன்போடுடைய நண்பர்களிடத்து உண்டு !
அவர்களிடம் தேடுங்கள் ! இதத்தனையும் உணர்ந்து கொள்ள முடியும் !
உண்மை !

chithramathan said...

அசோக் அண்ணனுக்கு மிகவும் பொருத்தமான வரிகள். உங்கள் நட்பின் இனிமையை நாங்களும் உன் கவிதை சுவையில் அனுபவித்தோம். தொடரட்டும் இனிமை.

Anna Arasu.K. said...

Yes,

By Literature, Ashokan may means the 'one who is free from Shokam and Kanner'

But, this Asokan can be easily made to weep by the only weapon in this world. That is by simple love and friendship.
For us, Ashokan means Friendship.
He is a role model for frienship.
INTHA VARTHAIGAL UNMAI;
VERUM PUGATCHI ILLAI.
This THULI 8 IS A REAL TESTIMONY FOR ASHOKAN'S CHARACTER.
THANKS MK for honouring FRIENDSHIP.

K.ARASU



Bu